மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல

காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரின் 2 கொள்கையில் நமக்கு உடன்பாடு உண்டு; ஒன்று மதச்சார்பின்மை மற்றொன்று மதுவிலக்கு. காந்தியின் உயிர்மூச்சுக் கொள்கையில் ஒன்று மதுவிலக்கு; அதனால்தான் அவர் பிறந்தநாளில் இந்த மாநாட்டை விசிக நடத்துகிறது.மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. ‘மதுவிலக்கே ஒற்றை நம் கோரிக்கை‘. இது கவுதம புத்தர் முன்வைத்த முழக்கம். சாதி, மத பெருமையை நாங்கள் பேசக்கூடியவர் அல்ல; பகவான் புத்தரின் பெருமைகளை பேசக்கூடியவர்கள். மதுவிலக்கில் திமுகவுக்கும்…

Read More

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு

டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நவ.26, 27ம் தேதிகளில் நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூரில் அதிக மழைப்பொழிவு பதிவாக வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Read More

வேதனையில் வேடந்தாங்கல் பறவைகள், வளையபுத்துார் கிராம மக்கள் தண்ணீரை தடுக்கின்றனரா?

இரண்டு கிராமங்களிடையே உள்ள உள்ளூர் பிரச்னை காரணமாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, நீர்வரத்து தடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. உத்திரமேரூர் மருதம் காப்புக்காட்டில் இருந்து வரும் தண்ணீர், நெல்வாய் ஏரி, வெள்ளப்புதுார் ஏரி, சித்துார் ஏரி, வளையபுத்துார் ஏரிகளுக்கு செல்ல கால்வாய் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறை முயற்சியால், வெள்ளப்புதுார் முதல் வேடந்தாங்கல் வரையிலான, 18 கி.மீ., கால்வாய் துார்வாரப்பட்டது. இதனால், இந்த கால்வாய் அமைப்பில், தண்ணீர் செல்வதில் எந்த தடையும் இல்லை. வளையபுத்துார் ஏரியில் இருந்து,…

Read More

மகாராஷ்டிராவில் நவ.20ல் ஓட்டுப்பதிவு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20ல் 2 கட்ட தேர்தல்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.20ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20ல் 2 கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு பதிவாகும் வாக்குகள் நவ.23ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. 

Read More

அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. இதில் 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு முதல் பரிசாக காரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன. இதேபோல், சிறந்த காளைக்கான முதல் பரிசை வி.கே.சசிகலாவின் காளை வென்றது. காளை வளர்ப்பாளர் மலையாண்டி பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்

Read More

கவர்னரை கண்டித்து நாளை போராட்டம்: தி.மு.க., அறிவிப்பு

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நாளை(ஜன.7) போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது.மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும். பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் தனி ராஜாங்கம் நடத்துகிறார்கள். இதைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க., தெரிவித்துள்ளது.

Read More

நலம் தரும் நவராத்திரி வழிபாடு

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையை ஒன்பது விதமான வடிவங்களில் வழிபடுவது வழக்கம். இதில் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை ஆதிசக்தியாகவும், அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை செல்வங்களை அருளும் மகாலட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் கலைகளையும், ஞானத்தையும் அருளக் கூடிய கலைமகளின் வடிவமாகவும் வழிபடுகிறோம். இதில் அம்பிகை, அசுரனை வதம் செய்வதற்கு முன் பல்வேறு தெய்வங்களிடம் இருந்து பெற்ற ஆயுதங்களை வைத்து பூஜை செய்த நாளையே ஆயுத பூஜையாக, நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் கொண்டாடுகிறோம். அம்பிகை,…

Read More

அரசு அங்கீகாரம் பெற்ற 4750 தட்டச்சுப் பள்ளிகள் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

தமிழக அளவில் அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, முதுநிலை தமிழ், ஆங்கிலம் தட்டச்சர், சுருக்கெழுத்தர், கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமெஷன் தேர்வுகள் நடைபெறும். அரசு துறையில் தட்டச்சர் பதவிக்கு தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், சி.ஓ.ஏ., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சி.ஓ.ஏ., தேர்வு எழுதுவதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சர் தேர்வில்…

Read More

பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் இந்த வருடம் ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து, 15ம் தேதி திருவள்ளுவர் நாளாகவும், ஜன., 16ம் தேதி உழவர் நாளாகவும் கொண்டப்படுகிறது. இதையொட்டி, ஜன., 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16ம் தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜன.,17ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு வேலை நாளாக இருந்தது.இந்த நிலையில், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள்…

Read More

மஹாராஷ்டிராவில் 65.1 சதவீதம் ஓட்டுப்பதிவு; 30 ஆண்டுகளில் அதிகம்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 1995ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, நேற்று அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 65.1 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆகியுள்ளது.

Read More