லெபனான்: தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் – போர் நிறுத்தம் கோரும் அமெரிக்கா, பிரான்ஸ்

 இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு இதுபற்றி கூறுகையில்,’ போர் நிறுத்தம் இல்லை’ என்று உறுதிபட தெரிவித்தார். நெத்தன்யாகு அமெரிக்கா சென்றாலும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுக்களை குறிவைத்தும், காசாவிலும் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அமெரிக்கா உள்ளிட்ட போர் நிறுத்த அழைப்புக்கு ஹிஸ்புல்லா…

Read More

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, நாளை (செப்., 28) முதல் அக்., 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை. ‘இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது; பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்க வேண்டும்’ என, கடலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Read More

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று காலை11 மணியளவில் பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.இந்த சந்திப்பில், தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட பணிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

Read More

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ள நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்பது அதில் முக்கியமானதாகும்.

Read More

தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு கனமழை.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு களமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம். திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. 28ம் தேதி கோவை, வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், 29ம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read More

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் – நாளை பிரதமரை சந்திக்கிறார்

பள்ளிக்கல்வித்துறை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி கேட்டு பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

Read More

ஜம்மு-காஷ்மீா்: இன்று இரண்டாம் கட்டத் தோ்தல்

ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப்.25) தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் 239 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ள நிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்கவுள்ளனா்.மூன்றாம் மற்றும் இறுதிகட்ட தோ்தல் அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு, அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

Read More

97 ஆவது ஆஸ்காருக்கு தமிழ் திரைப்படபடங்கள்.

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நடத்தும் 97வது ஆஸ்கார் விருதுகள், ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2025 அன்று நடைபெற உள்ள நிலையில் , 2024-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு 6 தமிழ் திரைப்படங்கள் செல்கிறது. மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா படங்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 தமிழ் திரைப்படங்கள் உள்பட இந்தியா சார்பில் 28 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொது நுழைவு, சிறந்த படம்,…

Read More

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

Read More