


டெல்லியில் காற்று மாசு: சுவாசப் பிரச்சினைகளால் பொது மக்கள் அவதி
டெல்லியில் தற்போது காற்றின் தரம் 226 ஆக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் சுவாச பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். காற்றில் உள்ள மாசை அளவிட காற்று தரக் குறியீடு (AQI) பயன்படுத்தப்படுகிறது. ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. 201 முதல்…

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள்
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அன்று முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜார்ஜ் கோட்டையில், அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் தலைமையில் உறுதிமொழி நிகழ்ச்சியும் நடந்தது.

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு
விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் கூம்பு வடிவம் மற்றும் நீல் உருண்டை வடிவிலான…

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சந்திரயான் 3 திட்ட பணிகளுக்காக உலக விண்வெளி விருது:
இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐஏஎப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகவும் மதிக்கப்படும், இந்த விருதை பெற்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

2024 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான Nihon Hidankyo க்கு வழங்கப்பட்டது
2024 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான Nihon Hidankyo க்கு வழங்கப்பட்டது “அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்று சாட்சிகள் மூலம் நிரூபித்ததற்காகவும்”.ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் இருந்து அணுகுண்டுகளில் இருந்து தப்பியவர்களின் இந்த அடிமட்ட இயக்கம், ஹிபாகுஷா என்றும் அழைக்கப்படும், அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை இனி ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை சாட்சிகளின் சாட்சியத்தின்…

சென்னையில் 2024 புத்தக கண்காட்சி
தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்யும் புத்தக கண்காட்சி, 27 டிசம்பர் 2024 அன்று சென்னையில் தொடங்க உள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் (8.10.2024) அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான் ஜே ஹாப்பீல்டு மற்றும் கனடாவில் வசிக்கும் இங்கிலாந்து விஞ்ஞானி ஜெப்ரே ஹிண்டன் ஆகியோருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித் துள்ளது. இயற்பியல் கருவிகளைப் பயன் படுத்தி இன்றைய சக்தி வாய்ந்த எந்திர கற்றலுக்கு அடிப்படையாக இருக்கும் முறைகளை உருவாக்கி யதற்காக இந்த பரிசு வழங்கப்படுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை– தமிழக அரசுக்கு, ஆளுநர் பாராட்டு
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் என்று கூறினார்.

மராட்டியம், ஜார்கண்ட்டில் இன்று வாக்குப்பதிவு
மும்பை,;மஹாராஷ்டிராவில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜார்க்கண்டில், 38 தொகுதிகளில் கடைசி மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஓட்டுச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்காக, 1,00,186 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7:00 – மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில், 4,140 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.