கனடா தூதரக அதிகாரிகள் ஆறு பேர் வெளியேற மத்திய அரசு உத்தரவு

கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆத்திரமடைந்த கனடா அரசு கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக டில்லியில் பணியாற்றிய அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்றியது. அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவிடப்பட்டது.இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறி கனடா நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார்…

Read More

சர்ச்சையில் கவர்னருக்கு தொடர்பில்லை; மன்னிப்பு கோரியது பிரசார் பாரதி!

தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதில், கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை,” என கவர்னர் மாளிகை கூறியுள்ளது. ‘இது கவனக்குறைவால் நேரிட்ட தவறு’ என்று கூறியுள்ள பிரசார் பாரதி, அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

Read More

ஜம்மு காஷ்மீர்: இறுதி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்

10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடக்கிறது. கடந்த 18-ந் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடந்தது. 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 25-ந் தேதி 26 தொகுதிகளில் 2-வதுகட்ட தேர்தல் நடந்தது. 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின.இந்நிலையில், 40 சட்டசபை தொகுதிகளில் இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு…

Read More

ரூபினா பிரான்சிஸ்-வெண்கலம் வென்றார்

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 3வது நாள்: பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.இத்துடன் இந்தியா 5 மெடல்களை பெற்றுள்ளது.

Read More

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதிகாலையில் எழுந்த மக்கள், நீராடி, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர். பின்னர், சூரியனை வணங்கி, கரும்புகள் வைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். வீடுகள் முன்பு, வாசல்களில் பல வண்ண கோலமிட்டு, புத்தம் புது பானைகளில் புத்தரிசி இட்டு பொங்கலிட்டு பெண்கள் மகிழ்ந்தனர்.உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

Read More

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பி.டி.உஷாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பி.டி.உஷாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தினால் சங்கத்திற்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் சி.ஏ.ஜி., குற்றம்சாட்டியது. இதனை பி.டி. உஷா மறுத்த நிலையில், அவரிடம் சி.ஏ.ஜி., விளக்கமும் கேட்டு இருந்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இணை செயலாளரும், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான கல்யாண் சவுபே கொண்டு வந்த தீர்மானத்தில், இந்திய ஒலிம்பிக்…

Read More

வழக்கறிஞர் மீது நடைபெறும் தாக்குதலை தடுக்க மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா: பார்கவுன்சில் பரிந்துரை தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்குமாறு தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒசூரில் நேற்று முன்தினம் வழக்கறிஞர் கண்ணன் மீது அரிவாளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது,…

Read More

ஊழியர்களை மிரட்டும் போக்கை கைவிடாவிட்டால் போராட்டம்; அரசுக்கு டாஸ்மாக் சம்மேளனம் எச்சரிக்கை

தஞ்சாவூரில், டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின், மாநில குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலர் திருச்செல்வன் கூறியதாவது:பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை, 20 ஆண்டுகளாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அ.தி.மு.க.,வும் நிறைவேற்றவில்லை; ஆளும் தி.மு.க.,வும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளவில்லை, தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்றதும், 500 டாஸ்மாக் கடைகளை மூடியதை வரவேற்கிறோம். ஆனால், அரசு கடைகளை மூடிவிட்டு, தனியாருக்கு மனமகிழ்மன்றம் என்ற வகையில் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது,…

Read More

அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. இதில் 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு முதல் பரிசாக காரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன. இதேபோல், சிறந்த காளைக்கான முதல் பரிசை வி.கே.சசிகலாவின் காளை வென்றது. காளை வளர்ப்பாளர் மலையாண்டி பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்

Read More

எனக்கும் முதல்வர் கனவு உண்டு: பழநியில் திருமாவளவன்.

பழனியாண்டவரை தரிசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதை பார்க்க வந்தேன். நேர்த்திக் கடன் செலுத்த வந்ததாக செய்திகளைக் கிளப்பி விடுவர். உண்மையில் அதற்காக வரவில்லை.காலம் காலமாக ஆதிக்க சக்திகளுக்கு அடிமைகளாக இருக்கும் மக்களை, ஆட்சி அதிகார பீடத்தில் அமரும் வகையில், அவர்களை மாற்ற வேண்டும். அதற்கு அம்மக்களை தகுதிப்படுத்த வேண்டும்.எனக்கும் முதல்வர் பதவி கனவு உண்டு. அதற்கேற்ப, இன்று முதல் புள்ளியை துவக்கியுள்ளோம். போகப்போக கனவை நனவாக்கும் இலக்கு நோக்கி…

Read More