தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள்

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அன்று முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜார்ஜ் கோட்டையில், அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் தலைமையில் உறுதிமொழி நிகழ்ச்சியும் நடந்தது.

Read More

பெரியார் வழியில் பயணிப்போம் – தவெக தலைவர் விஜய்

பெரியார் நினைவிடத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளான இன்று தவெக தலைவர் விஜய் தனது X தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். பகுத்தறிவு பகலவன், பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய சமத்துவம், சமூக நீதி, சம உரிமை பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம்” என பதிவிட்டுள்ளார்.

Read More

கெஜ்ரிவால் இன்று ராஜினாமா?

மதுபான ஊழல் வழக்கில், ஜாமினில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவாலுக்கு, முதல்வர் அலுவலகத்திற்கு போக கூடாது. பைல்களில் கையெழுத்து போடக் கூடாது என பல்வேறு உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. பயனற்றதாகி விட்ட முதல்வர் பதவியை, கெஜ்ரிவால் இன்று (செப்டம்பர் 17) ராஜினாமா செய்ய உள்ளார்.

Read More

 முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு , திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

Read More

போஸ் வெங்கட் இயக்கத்தில்-சார்

கன்னி மாடம் வெற்றியை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகும் சார் திரைப்படம் நாளை ஆடியோ லாஞ்ச் மற்றும் ட்ரைலர் வெளியீடு நடைப்பெற உள்ளது.

Read More

காரைக்குடி-வளா் தமிழ் நூலகத்துக்கு திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி நன்கொடையாக அளித்துள்ள 1054 புத்தகங்கள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தனது சொந்த நிதி ரூ12. 50 கோடியில் புதிதாக கட்டி வரும் வளா் தமிழ் நூலகத்துக்கு திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி நன்கொடையாக அளித்துள்ள 1054 புத்தகங்களின் பட்டியலை பெரியாா் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளை உறுப்பினா் காரைக்குடி சாமி. திராவிடமணி ப. சிதம்பரத்திடம் சனிக்கிழமை வழங்கினாா். அப்போது காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உடனிருந்தாா்.

Read More

விஜயின் தவெக மாநாட்டுக்கு அனுமதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விஜய் கட்சியின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக விழுப்புரம் டிஎஸ்பி தகவல் தெரிவித்துள்ளார். மாநாடு நடக்கும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் நடத்த வேண்டும். குழந்தைகள், பெரியவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறை த.வெ.க மாநாட்டுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி. நாளை முடிவு

புதுடெல்லி: ரூ.2000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18சதவீத ஜிஎஸ்டி விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ள 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Read More