மழை நீா்க் கால்வாய்களை தூா்வாரும் பணி

காரைக்குடி மாநகராட்சியில் மழை நீா்க் கால்வாய்களை தூா்வாரும் பணி நேற்று தொடங்கியது. காரைக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மேயா் சே. முத்துத்துரை தூா்வாரும் பணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினா்கள் சொ. கண்ணன், காா்த்திகேயன், கலா, தெய்வானை, நாச்சம்மை, பொறியாளா் செந்தில்குமாா், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

Read More

காரைக்குடி; டென்ஷனான மேயரால் பரபரப்பு

காரைக்குடி: மாநகராட்சி அலுவலகத்தில் முதல் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு. அதிமுக கவுன்சிலர் ஊழல் புகார் கூற திமுக வினர் எதிர்க்க டென்ஷனான மேயர் முத்துதுரை அதிமுக கவுன்சிலரை ஒருமையில் பேசி நீ கிழிச்சதுலாம் போதும் முதல்ல வெளியே போயா என கூறியதுடன் பத்திரிக்கையாளர்களை வெளியேறச் சொல்ல அனைவரும் முகம் சுளிப்பு

Read More

முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

3 முக்கிய கோரிக்கைகள் தில்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். தமிழகத்துக்கு சமக்ரா சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிப்பது, சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிகளுக்கான நிதியை உடனே வழங்குவது, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம்…

Read More

அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. இதில் 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு முதல் பரிசாக காரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன. இதேபோல், சிறந்த காளைக்கான முதல் பரிசை வி.கே.சசிகலாவின் காளை வென்றது. காளை வளர்ப்பாளர் மலையாண்டி பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்

Read More

மெரினா கூட்ட நெரிசலில் 5 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில், வெயில் தாங்க முடியாமல் 5 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.

Read More

தாளமுத்து – நடராசன் நினைவிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்று உயிர் நீத்த தாளமுத்து மற்றும் நடராசனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கடந்த 1938ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். பல்லாயிரம் பேர் சிறை சென்றனர். சென்னை அடையார், தியாசபிகல் பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சென்னை, பெரம்பூர் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் வசித்துவந்த லட்சுமணன்-அம்மாக்கண்ணு இணையருக்கு 1919ம் ஆண்டு…

Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1000 காளைகள் இன்று களம் கண்டன.மொத்தம் 9 சுற்றுகள் நடத்தப்பட்டது. மொத்தம் 1000 காளைகள்…

Read More

2024-2025 ஆம் ஆண்டு கலைச்செம்மல் விருதுக்கான கலைஞர்கள்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் ஓவிய நுண்கலைக் குழு வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதும், தலா ரூ.1,00,000 வீதம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மரபுவழி ஓவியப் பிரிவில், ஓவியர் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்பப் பிரிவில் லே.பாலச்சந்தர் மற்றும் கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவியப் பிரிவில் கே.முரளிதரன் மற்றும் ஏ.செல்வராஜ், நவீனபாணி…

Read More

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் – நாளை பிரதமரை சந்திக்கிறார்

பள்ளிக்கல்வித்துறை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி கேட்டு பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

Read More