2024 பாரா ஒலிம்பிக் நிறைவு விழா. 29 பதக்கங்கள்

ஹர்விந்தர் சிங் பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் முதல் வில்வித்தை தங்கப் பதக்கத்தை வென்றவர், ப்ரீத்தி பெண்களுக்கான 100 மீட்டர் T35 போட்டியிலும், பெண்களுக்கான 200m T35 போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றவர். ஹர்விந்தர் சிங் மற்றும் ப்ரீத்தி பால் இருவரும் பாராலிம்பிக்ஸ் நிறைவு விழாவில் இந்தியாவின் கொடி ஏந்தி வருவார்கள். ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 13 வெண்கலம் உட்பட 29 பதக்கங்களுடன் இந்தியா பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் தனது வரலாற்றுப் பக்கத்தை நிறைவு செய்தது. ஒட்டுமொத்த…

Read More

காளை மாடுகளுக்கான அழகுபோட்டி

தமிழகத்தில் முதல் முறையாக நாட்டு இன காளை மாடுகளுக்கான அழகுபோட்டி 14 நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாட்டு இன காளை மாடுகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது இந்த அழகு போட்டியில் சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 14 நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்றன நாட்டுக்குட்டை, காங்கேயம், புலிக்குளம், தேனிமலைமாடு, புதுக்கோட்டை சிகப்பு, மட்டி…

Read More

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் இன்று(செப்.7) விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடந்தது.அதிகாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நேற்று மேலும் 2 பதக்கங்கள் இந்தியா இதுவரை 26 பதக்கங்கள் பெற்றுள்ளது.

2024 பாரா ஒலிம்பிக்-ஆடவர் ஷாட் புட் F57 போட்டியில் Hokato Hotozhe Sema வெண்கலம் வென்றார்.ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி64 இறுதிப் போட்டியில் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார்

Read More

பிள்ளையார் பட்டி சதுர்த்தி விழா தேரோட்டம்.

பிள்ளையார்பட்டியில் நேற்று சதுர்த்தி விழாவை முன்னிட்டு 9ம் நாள் விழாவாக தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.

Read More

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசுக்கு கண்டனம்

விநாயகர் சிலை கரைப்புக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ள நிலையில், அதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Read More

பாரா ஒலிம்பிக் 2024 கபில் பார்மர் வெண்கலம் வென்றார்.

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 8 ஆம் நாள் நேற்று: கபில் பர்மர் இந்தியாவின் 25 வது பதக்கத்திற்காக ஜெ1 ஜூடோ வில் வெண்கல பதக்கத்தை வென்றார்.

Read More

அதிக வருமான வரி செலுத்தும் பிரபலங்கள் முதலிடத்தில் ஷாருக்கான், 2ஆம் இடத்தில் விஜய்

கடந்த நிதியாண்டில் அதிக வரி செலுத்திய இந்திய பிடபலங்களில் ஷாருக்கான் 92 கோடி செலுத்தி முதலிடத்திலும் நடிகர் விஜய் 80 கோடி செலுத்தி இரண்டாமிடத்திலும் உள்ளதாக பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது.

Read More

விநாயகர் சிலைகள்,ஊர்வலம்-கட்டுப்பாடு

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், சிலைகள் வைப்பதற்கான இடங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக போலீசார் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் பல்ேவறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி போலீசார் சென்னை உயர்…

Read More

ஆசிரியர் தின வாழ்த்து

சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள். அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு வாழ்த்துகள்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

Read More