தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதிகாலையில் எழுந்த மக்கள், நீராடி, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர். பின்னர், சூரியனை வணங்கி, கரும்புகள் வைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். வீடுகள் முன்பு, வாசல்களில் பல வண்ண கோலமிட்டு, புத்தம் புது பானைகளில் புத்தரிசி இட்டு பொங்கலிட்டு பெண்கள் மகிழ்ந்தனர்.உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

Read More

ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம்

ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஏலம் நடைபெறுகிறது. 1,574வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் இறுதியாக ஏலத்தில் இடம்பெற உள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது.

Read More

 முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு , திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

Read More

ரூ.6,000 கோடி மோசடி நியோமேக்ஸ் வழக்கு

நியோமேக்ஸ் நிறுவன சொத்து களை முடக்குவதற்கான அரசாணை வெளியிடாவிட்டால், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் இருந்து பெற்ற முதலீட்டுத்தொகை ரூ.6 ஆயிரம் கோடி வரை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனால், இந்நிறுவனத்தின் இயக்குனர்கள், ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலர் கைதாயினர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களும், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும் சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்….

Read More

பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது

பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று இரவு 8 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை இயங்காது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஆவண சரிபார்ப்பு நேர்க்காணலுக்கு முன்பதிவு செய்திருந்த அனைவரும் நேரமுள்ள பிற நாள்களில் மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு

விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் கூம்பு வடிவம் மற்றும் நீல் உருண்டை வடிவிலான…

Read More

புயல் தாமதம்; நவ.,30ல் கரையை கடக்கிறது பெங்கல் புயல்!

‘வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. ‘பெங்கல்’ புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.,30ம் தேதி காலை கரையை கடக்கும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More

இஸ்ரோ வரலாற்று சாதனை

ஸ்பேடெக்ஸ் (SpaDex) திட்டத்தின் கீழ், பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட 2 விண்கலங்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக இணைத்துள்ளது. இந்த இணைப்பு செயல்முறையை (Docking) வெற்றிகரமாக செய்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளதாக, இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது SDX01 (Chaser) மற்றும் SDX02 (Target) ஆகிய இரு செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அவை தற்போது வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன. இணைப்பு செயல்முறை துல்லியமாக தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று…

Read More

காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம்

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தப் பணியில் அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் ஈடுபட்டன. காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள்…

Read More

பாரா ஒலிம்பிக்-தங்கம்,வெண்கலம் வென்ற இந்தியர்கள்

இந்திய வீராங்கனை அவனி லேகரா 249.7 புள்ளிகள்(ஓலிம்பிக் ரெகார்ட்) பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தென் கொரியா வீராங்கனை லீ யுன்ரி 246.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் மற்றும் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர்.

Read More