
பாரா ஒலிம்பிக் 2024 கபில் பார்மர் வெண்கலம் வென்றார்.
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 8 ஆம் நாள் நேற்று: கபில் பர்மர் இந்தியாவின் 25 வது பதக்கத்திற்காக ஜெ1 ஜூடோ வில் வெண்கல பதக்கத்தை வென்றார்.
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 8 ஆம் நாள் நேற்று: கபில் பர்மர் இந்தியாவின் 25 வது பதக்கத்திற்காக ஜெ1 ஜூடோ வில் வெண்கல பதக்கத்தை வென்றார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினி, 73, நேற்றிரவு சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இன்று அவருக்கு முக்கிய பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.பரிசோதனைக்கு பிறகு இன்றே வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோடி திட்டமான சந்திரயான் 5 திட்டத்துக்கு தேசிய விண்வெளி ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியா-ஜப்பான் இணைந்து திட்டத்தை தயாரிக்க உள்ளனர். சந்திரயான் -5 திட்டத்துக்கு நிலவு துருவ ஆய்வு திட்டம்(லூபெக்ஸ்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் ரோவரையும், இஸ்ரோ லேண்டரையும் தயாரிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் -5 திட்டத்தில் அதிகசக்தி வாய்ந்த, அதிக எடை கொண்ட லேண்டரை, ரோவரை பயன்படுத்த உள்ளோம். நிலவில்…
நியூயார்க்: உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சென்னை வீராங்கனை வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். அரை இறுதியில் சீன வீராங்கனை ஜு வென்ஜுனிடம் தோற்றதை அடுத்து வைஷாலிக்கு வெண்கலம் கிடைத்தது. சீன வீராங்கனை ஜு வென்ஜுனிடம் 0.5-2.5 என்ற புள்ளி கணக்கில் வைஷாலி தோல்வியடைந்தார்.
2017ம் ஆண்டு உருவாக்கபப்ட்டது. ‘வுமென் இன் சினிமா கலெக்டிவ்’ என்ற பெண்கள் அமைப்பு இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. பெண் நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக புகார்களை முன்வைத்துள்ளனர். இதனையே நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையும் உறுதி செய்திருந்தது. அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு, பாதுகாப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களும், அவர்கள் குற்றம் சுமத்திய ஆண்களின் பெயர்களும் அடங்கிய பகுதிகள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. “எக்காரணம் கொண்டும், தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால், இந்த முதல்வர் பொறுப்பில் நான் இருக்கமாட்டேன்.” என்று தமிழக…
கோவை தொண்டாமுதூரில் உள்ள ஈஷா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈஷா மையத்தின் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் விரிவான அறிக்கையை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை அக்டோபர் 4-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 1995ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, நேற்று அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 65.1 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆகியுள்ளது.
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப் போட்டி இன்று முதல் (நவம்பர் 25) டிசம்பர் 13-ம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான டி. குகேஷ், நடப்பு உலக சாம்பியனும், சீன வீரருமான டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாடவுள்ளார். இந்தப் போட்டியில் உலக சாம்பியன் லிரெனுடன் மோதும், 18 வயதான தமிழக வீரரான டி. குகேஷ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் குகேஷ் வெற்றி பெற்றால், மிக இளம் வயதில்…
காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரின் 2 கொள்கையில் நமக்கு உடன்பாடு உண்டு; ஒன்று மதச்சார்பின்மை மற்றொன்று மதுவிலக்கு. காந்தியின் உயிர்மூச்சுக் கொள்கையில் ஒன்று மதுவிலக்கு; அதனால்தான் அவர் பிறந்தநாளில் இந்த மாநாட்டை விசிக நடத்துகிறது.மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. ‘மதுவிலக்கே ஒற்றை நம் கோரிக்கை‘. இது கவுதம புத்தர் முன்வைத்த முழக்கம். சாதி, மத பெருமையை நாங்கள் பேசக்கூடியவர் அல்ல; பகவான் புத்தரின் பெருமைகளை பேசக்கூடியவர்கள். மதுவிலக்கில் திமுகவுக்கும்…