பிளிங்கிட் 10 நிமிடங்களில் ரிட்டன் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இ-காமர்ஸ் தளங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டன. இன்றெல்லாம் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது தங்களுடைய அளவு மற்றும் ஏதாவது ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். ஆடைகள் மற்றும் இதர பொருட்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்த தளங்கள் மக்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. அதே நேரத்தில் ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்வது நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்து வருகிறது. அதை சரி செய்யும்…

Read More

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள்

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அன்று முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜார்ஜ் கோட்டையில், அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் தலைமையில் உறுதிமொழி நிகழ்ச்சியும் நடந்தது.

Read More

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

சென்னை, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) இன்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர்பிரிந்தது. டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Read More

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள், 8,964 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தப் பணிகள் வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கும்.

Read More

உலக கோப்பை கேரம் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த காஷிமா மூன்று பதக்கங்கள் வென்று சாதனை 

அமெரிக்காவில் நடந்த, 6வது உலக கோப்பை கேரம் போட்டியில், சென்னையை சேர்ந்த, நம் தமிழ் மகள், காஷிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்கு பாராட்டுக்கள். பெருமை கொள்கிறேன் மகளே. எளியோரின் வெற்றியில் தான் அரசின் வெற்றி அடங்கி இருக்கிறது.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து. இவர், புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள். தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும், இவர் வெற்றி பெற்றுள்ளர். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு

இலங்கையில், காலை 7 மணிக்குத் துவங்கிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். வாக்குப்பதிவு முடிவடைந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை துவங்கும். சனிக்கிழமை நள்ளிரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரலாம்.இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம். 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த…

Read More

கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று(ஜன.6) காலை 9.30க்கு தொடங்கியது. இதில் கலந்து கொள்ள தலைமைச் செயலகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் உரிய மரியாதை தரப்பட்டது. பின்னர் சபாநாயகர் அப்பாவு, கவர்னரை சட்டசபைக்குள் அழைத்துச் சென்றார். முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்ததால் கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு…

Read More

‘ஆபரேஷன் சிந்தூர்’ – இந்தியா குறிவைத்து தாக்கிய 9 இலக்குகள்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் மூலம் குறிவைத்து தகர்த்த 9 பயங்கரவாத முகாம்கள் பற்றிய தகவல்களை அரசு பகிர்ந்துள்ளது. 1.முசாஃபர்பாத்தில் உள்ள சாவய் நாலா முகாம்: இது லஷ்கர் இ தொய்பாவின் பயிற்சி முகாமாக இருந்தது. கடந்த 2024, அக்.20-ல் சோன்மார்க்கில் நடந்த தாக்குதல், 2024, அக்.24 குல்மார்க்கில் நடந்த தாக்குதல், 2025. ஏப்.22 பஹல்காமில் நடந்த தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி…

Read More