திருப்பதியில் கூட்ட நெரிசல்; 6 பேர் பலி

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவத்திற்கு தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. ஒரே கவுன்டரில் 5,000க்கும் மேற்பட்டோர் திரண்டது எதிர்பாராதது என விளக்கம் அளித்துள்ளது.ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்புடன் வைகுண்ட ஏகாதசி தரிசனம் துவங்குகிறது. வரும் 19ம் தேதி வரை வைகுண்ட துவாரம், பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட…

Read More

கோர்ட் தீர்ப்பு எதிரொலி-பழைய பள்ளி கட்டடங்களை உடனே இடிக்க அரசு உத்தரவு

சென்னை: பயன்பாடில்லாத பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க, பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.

Read More

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 25ல் தொடங்குகிறது

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்த வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில தேர்தல் முடிவுகள் வரும் 23ம் தேதி வெளியாகும் நிலையில், அதன் முடிவுகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்பதால் இக்கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

Read More

சென்னையில் கார் ரேஸ்

சென்னையில் ஃபார்முலா-4 ரேசிங் ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இன்று (ஆக.31) மற்றும் நாளை (செப்.1) இரவு நடைபெறுகிறது. இதற்காக தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ., தொலைவுக்கு பிரத்யேக பந்தய தனம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் பகுதியில் 8000 ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், மின் விளக்குகள், இரும்பு தடுப்புகள் போன்ற அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இரவு 7.10 முதல் 8:45 மணி வரை பல்வேறு பிரிவுகளுக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற உள்ளன.

Read More

162 மீனவர்களை விடுவிக்க கோரி இலங்கை துணை தூதரகம் 8-ம் தேதி முற்றுகை: பாமக தலைவர் அன்புமணி

இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும். இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் பாமகசார்பில் இலங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும்,பாமக இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி, பாமக பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சியின் அனைத்து இணை…

Read More

சாட்டிலைட் இன்டர்நெட் உரிமம் இனி ஏலம் கிடையாது

தொலைதொடர்பு சேவை வழங்குவதற்கான அலைக்கற்றையை நிறுவனங்கள் பெறுவதற்கு ஏல நடைமுறை பின்பற்றப்படுகிறது. குறிப்பிட்ட அளவு அலைக்கற்றையை ஆண்டுகள் அடிப்படையில் அரசு ஏலம் விடுவதும்; அதில் ஒரு பகுதியை, பணம் செலுத்தி உரிமம் பெற்று சேவை அளித்து கட்டணம் வசூலிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏலம் நடத்தி உரிமம் வழங்க வேண்டும் என்று தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஜியோ நிறுவனம் அண்மையில் கடிதம் எழுதியது. ஜியோவுக்கு ஆதரவு அளிக்கும்…

Read More

அரை இறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி

 மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் சென்ற சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சங்கீதா குமாரி 32-வது நிமிடத்திலும், சலீமா 37-வது நிமிடத்திலும் பீல்டு கோல் அடித்தனர். 60-வது நிமிடத்தில் தீபிகா, பெனால்டி கார்னரில் கோல் அடித்தார். இந்திய…

Read More

சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய நிலையில் கோவையில் வேகம் எடுக்கும் ராணுவ தொழில் பூங்கா பணி

கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வாரப்பட்டி கிராமத்தில் 420 ஏக்கரில் ராணுவ விமானங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து, இதற்கான மேம்பாட்டு பணிகளை தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) தொடங்கி செயல்படுத்தி வருகிறது. ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்கா அமைக்க இருப்பது கோவை தொழில் துறையினர் இடையே வரவேற்பு பெற்று உள்ளது. இதற்காக தனியாரிடமிருந்து சுமார் 350 ஏக்கர் நிலத்தை டிட்கோ ஆர்ஜிதம் செய்துள்ளது. இந்த நிலத்துடன் சேர்த்து மொத்தம்…

Read More

மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல

காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரின் 2 கொள்கையில் நமக்கு உடன்பாடு உண்டு; ஒன்று மதச்சார்பின்மை மற்றொன்று மதுவிலக்கு. காந்தியின் உயிர்மூச்சுக் கொள்கையில் ஒன்று மதுவிலக்கு; அதனால்தான் அவர் பிறந்தநாளில் இந்த மாநாட்டை விசிக நடத்துகிறது.மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. ‘மதுவிலக்கே ஒற்றை நம் கோரிக்கை‘. இது கவுதம புத்தர் முன்வைத்த முழக்கம். சாதி, மத பெருமையை நாங்கள் பேசக்கூடியவர் அல்ல; பகவான் புத்தரின் பெருமைகளை பேசக்கூடியவர்கள். மதுவிலக்கில் திமுகவுக்கும்…

Read More