தமிழக மீனவா்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

இலங்கை கடற்படையினரால் 37 தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

Read More

கவர்னரை வாபஸ் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். ஹிந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் கவர்னர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் கவர்னர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழகத்தையும் – தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் கவர்னரை மத்திய அரசு உடனடியாகத்…

Read More

சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய்

கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், ‘திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது கட்சி கொள்கையாக இருக்கும்’ என்றார். அது மட்டுமின்றி, ‘ஆ ஊ என்று சத்தமா கோபமா பேசி விட்டால் போதுமா’ என்றும் கிண்டல் தொனியில் விஜய் பேசியிருந்தார். சீமானை மட்டம் தட்டும் வகையில் விஜய் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன.இதையடுத்து விஜய் பற்றி சீமான் தாறுமாறாக விமர்சனம் செய்தார். சீமான் கூறியதாவது: ‘திராவிடமும் தமிழ் தேசியமும் வேறு வேறு. விஜய் கொள்கை…

Read More

ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம்

ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஏலம் நடைபெறுகிறது. 1,574வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் இறுதியாக ஏலத்தில் இடம்பெற உள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது.

Read More

மருந்துகள் விலை உயர்வு ஏன்? விளக்கம் கேட்கிறது நிலைக்குழு

புதுடில்லி: கடந்த அக்டோபரில், 11 மருந்துகள் மீது 50 சதவீத விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததற்கு விளக்கம் அளிக்கும்படி, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பார்லி., நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது.என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த அக்டோர் 15ம் தேதி வெளியிட்ட உத்தரவில், 11 மருந்துகளுக்கான விலையை 50 சதவீதம் அதிகரிக்க அனுமதித்துள்ளது. பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப விலையை உயர்த்த கோரி மருந்து நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றதாக அது…

Read More

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. “மைக்ரோஆர்என்ஏவின் கண்டுபிடிப்பு மற்றும் பிந்தைய டிரான்ஸ்கிரிப்ஷனல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு” கண்டுபிடித்ததற்காக 2 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது.

Read More

டெல்லியில் காற்று மாசு: சுவாசப் பிரச்சினைகளால் பொது மக்கள் அவதி

டெல்லியில் தற்போது காற்றின் தரம் 226 ஆக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் சுவாச பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். காற்றில் உள்ள மாசை அளவிட காற்று தரக் குறியீடு (AQI) பயன்படுத்தப்படுகிறது. ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. 201 முதல்…

Read More

மழையில் தப்பியது சென்னை!

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது. சென்னைக்கு வடக்கே அதிகாலை 4.30 மணிக்கு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Read More

2024-2025 ஆம் ஆண்டு கலைச்செம்மல் விருதுக்கான கலைஞர்கள்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் ஓவிய நுண்கலைக் குழு வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதும், தலா ரூ.1,00,000 வீதம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மரபுவழி ஓவியப் பிரிவில், ஓவியர் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்பப் பிரிவில் லே.பாலச்சந்தர் மற்றும் கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவியப் பிரிவில் கே.முரளிதரன் மற்றும் ஏ.செல்வராஜ், நவீனபாணி…

Read More