மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரு கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சமீபத்தில் பெயர்ந்து விழுந்தது. இந்த விவகாரம் குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருச்சி என்.ஐ.டி. கல்லூரியின் சிவில் துறைத் தலைவர், மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், ராஜாஜி மருத்துவமனை டீன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

Read More

ஈரான் மீது தாக்குதல்; துவங்கியது இஸ்ரேல் ராணுவம்!

ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் துவங்கி உள்ளது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Read More

காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம்

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தப் பணியில் அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் ஈடுபட்டன. காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள்…

Read More

கோவையில் டைடல் பார்க்கை, முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

கோவை விளாங்குறிச்சியில் டைடல் பார்க்கை, முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். முன்னதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.நாளை, 5ம் தேதி கோவை வரும் முதல்வர், விளாங்குறிச்சியில் எட்டு தளங்களுடன், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2.98 லட்சம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள, எல்காட் டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.

Read More

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வார்னிங்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பினாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, வரும் 14ம்…

Read More

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

* 12 ம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது. ரிசல்ட்12ம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025* 11ம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.  ரிசல்ட்11ம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025* 10ம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.  ரிசல்ட்10ம் வகுப்பு- மே 19ம் தேதி,2025 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை * தமிழ்- 28.03.2025 * ஆங்கிலம்- 02.04.2025*…

Read More

பாராசிட்டமால், பான் டி உள்பட 53 மருந்துகள் தரக்கட்டுப்பாட்டுத் தேர்வில் தோல்வி!

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, பாராசிடமால், விட்டமின் டி, கால்சியம் சத்து மாத்திரைகள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள், நீரிழிவு மாத்திரைகள், நிர்ணயிக்கப்பட்ட தர அளவில் இல்லை. மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஒவ்வொரு மாதமும் தன்னிச்சையாக மாத்திரைகளின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். அதன்படி, ஆகஸ்ட் மாத ஆய்வு முடிவு இந்த தகவல்களை அளித்திருக்கிறது. விட்டமின் சி, டி3 மாத்திரைகள், ஷெல்கால், விட்டமின் பி காம்ப்ளெக்ஸ், விட்டமின்…

Read More

இலங்கை பார்லிமென்டில் பெரும்பான்மையை கைப்பற்றியது அனுரா கட்சி

இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் அனுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அக்கட்சி 61.6 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, தேசிய மக்கள் சக்தி ஒட்டுமொத்தமாக 61.6 சதவீத ஓட்டுக்களை பெற்றது.சஜித் பிரேமதாசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 17.7 சதவீத ஓட்டுக்களுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி 4.5 சதவீத ஓட்டுடன் 3வது இடத்தையும்,ராஜபக்சேவின் இலங்கை…

Read More

தமிழகத்துக்கு மத்திய அரசு செய்த அநீதி

சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ள PM SHRI திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு மாற்றிவிட்டதாக வெளியான செய்தியை டேக் செய்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல்…

Read More